சேலத்தில் உலக உடற்கூறியல் தினம் கடைபிடிப்பு

மனித உடற்கூறு சார்ந்த சிறந்த ஆய்வுகளை மேற்கொண்ட ஆண்ட்ரூஸ் வெசாலியஸ் நினைவாக உலக உடற்கூறியல் தினம் கடைபிடிக்கப்பட்டது. இதையொட்டி, விநாயகா மிஷனின் விம்ஸ் அலைடு ஹெல்த் சயின்ஸ் கல்லூரியில் உடற்கூறியல் பிரிவின் சார்பில் மாணவர்களுக்கு ஓவியம், மாதிரி வடிவமைப்பு, வினாடி-வினா போன்ற பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டன. கல்லூரி முதல்வர் செந்தில்குமார் உடற்கூறியல் தினத்தின் அவசியத்தையும், மருத்துவத் துறையில் மனித உடலின் அமைப்பு மற்றும் செயல்பாட்டைப் புரிந்துகொள்வதன் முக்கியத்துவத்தையும் மாணவர்களுக்கு விளக்கினார். கிருபானந்த வாரியார் மருத்துவக் கல்லூரியின் உதவிப் பேராசிரியை பன்னீர்செல்வி சிறப்பு நடுவராகப் பங்கேற்று, போட்டிகளை மதிப்பீடு செய்து, வெற்றி பெற்ற மாணவர்களுக்குப் பரிசுகளை வழங்கினார்.

தொடர்புடைய செய்தி