இளம்பிள்ளை அருகே லாரியின் பின்பக்க கதவு மோதி தொழிலாளி சாவு

இளம்பிள்ளை அருகே காந்திநகர் பகுதியைச் சேர்ந்த விசைத்தறி தொழிலாளி தனராஜ் (53), வீடு கட்டுவதற்காக பாரப்பட்டி பகுதியிலிருந்து கொண்டுவரப்பட்ட மணலை டிப்பர் லாரியில் கொட்டியபோது, லாரியின் பின்பக்க கதவு மோதி பலத்த காயமடைந்து சேலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தனர். இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி