சேலம் மாவட்டம் ஆட்டையாம்பட்டியில் உள்ள விவசாய கிணற்றில் நேற்று காலை 28 வயது மதிக்கத்தக்க பெண் உடல் மிதந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டது. பொதுமக்கள் அளித்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்த ஆட்டையாம்பட்டி போலீசார், உடலை மீட்டு விசாரணை நடத்தினர். உயிரிழந்த பெண் யார், எந்த ஊரைச் சேர்ந்தவர் என்பது குறித்து இதுவரை தெரியவரவில்லை. அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இது கொலையாக இருக்கலாம் என்ற கோணத்தில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.