சேலம் அஸ்தம்பட்டி பிள்ளையார் நகரைச் சேர்ந்த ராஜலட்சுமி (37) என்பவர் நேற்று முன்தினம் இரவு வீட்டில் துப்பட்டாவால் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். குடும்பப் பிரச்சனையால் அடிக்கடி கணவருடன் ஏற்பட்ட தகராறில் மனமுடைந்து அவர் தற்கொலை செய்து கொண்டதாகக் கூறப்படுகிறது. அஸ்தம்பட்டி போலீசார் சம்பவ இடத்துக்குச் சென்று உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.