சேலத்தில் இருதரப்பினர் மோதல்; 10 பேர் கைது

சேலம் கிச்சிப்பாளையம் பகுதியில் கோயில் திருவிழாவில் மேளம் அடித்துக் கொண்டிருந்த விஜய் என்பவர் மீது, நடனமாடிய கும்பல் தாக்குதல் நடத்தியது. இதில் காயமடைந்த விஜய் சேலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இது தொடர்பாக கிச்சிப்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து லட்சுமணன், ஆசாத், மணிகண்டன், கவுதம் உள்ளிட்ட 10 பேரை கைது செய்தனர்.

தொடர்புடைய செய்தி