சேலம் மார்க்கெட்டில் தக்காளி விலை கடும் உயர்வு

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதால் காய்கறிகள் விளைச்சல் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் சந்தைகளுக்கு காய்கறிகள் வரத்து குறைந்து, சேலம் காய்கறி மார்க்கெட் மற்றும் உழவர் சந்தைகளில் காய்கறிகளின் விலை இருமடங்காக உயர்ந்துள்ளது. உழவர் சந்தையில் தக்காளி ரூ.65க்கும், வெளிச்சந்தையில் ரூ.70-80க்கும் விற்பனையானது. கத்திரிக்காய் ரூ.42, வெண்டை ரூ.56, பீர்க்கங்காய் ரூ.48, அவரைக்காய் ரூ.70, பாகற்காய் ரூ.58, பச்சை மிளகாய் ரூ.48, சின்ன வெங்காயம் ரூ.50, முருங்கக்காய் ரூ.280, கேரட் ரூ.80, பீன்ஸ் ரூ.70 என பல காய்கறிகளின் விலையும் கணிசமாக உயர்ந்துள்ளது.

தொடர்புடைய செய்தி