ஆட்டையாம்பட்டி பெரிய மாரியம்மன் கோவிலில் சிறப்பு பூஜை

ஆட்டையாம்பட்டி எட்டுப்பட்டி பெரிய மாரியம்மன் கோவிலில் ஐப்பசி மாத கடைசி வெள்ளிக்கிழமையையொட்டி சிறப்பு பூஜை நடைபெற்றது. இதில், அம்மனுக்கு பால், தயிர், தேன், சந்தனம், மஞ்சள், ஜவ்வாது, திருமஞ்சனம், குங்குமம் உள்ளிட்ட வாசனை திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. தொடர்ந்து, அம்மனுக்கு பூக்களால் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை மற்றும் பூஜை நடத்தப்பட்டது. இந்த பூஜையில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். வழக்கமாக ஆடி மாதத்தில் 15 நாட்கள் திருவிழா நடைபெறும் இந்த கோவிலில், சிறப்பு பூஜைகள் பக்தர்களுக்கு ஆன்மீக அனுபவத்தை அளித்தன.

தொடர்புடைய செய்தி