சேலம் சீரகாபாடியில் ஒற்றுமை அணிவகுப்பு பாதயாத்திரை நிகழ்வு

இந்திய அரசின் விளையாட்டு, இளைஞர்கள் நல அமைச்சகத்தின் அறிவுறுத்தலின் பேரில், சர்தார் வல்லபாய் படேலின் 150-வது பிறந்த நாளையொட்டி விநாயகா மிஷனின் விம்ஸ் அலைடு ஹெல்த் சயின்ஸ் கல்லூரி, சேலம் மாவட்ட இளையோர் அலுவலக மை பாரத் கேந்திரா அமைப்புடன் இணைந்து சின்ன சீரகாபாடியில் ஒற்றுமை அணிவகுப்பு பாத யாத்திரையை நடத்தியது. கல்லூரி முதல்வர் செந்தில்குமார் முன்னிலையில், சேலம் உதவி கலெக்டர் விவேக் யாதவ் கொடி அசைத்து தொடங்கி வைத்தார். கல்லூரி வளாகத்தில் தொடங்கி பெரிய சீரகாபாடியில் நிறைவடைந்த இந்த பாத யாத்திரையில், மாணவர்கள் ஒற்றுமையை வலியுறுத்தும் பதாகைகளை ஏந்தி பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர். பங்கேற்ற மாணவ- மாணவிகளுக்கு சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.

தொடர்புடைய செய்தி