சேலம் மாநகரின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்ய 1911-ல் உருவாக்கப்பட்ட பனமரத்துப்பட்டி ஏரிக்காக காலி செய்யப்பட்ட அத்திப்பட்டி, சூரியூர் உள்ளிட்ட கிராமங்களின் 1,400 ஏக்கர் விவசாய நிலங்களை திரும்ப ஒப்படைக்கக் கோரி அகில இந்திய விவசாயிகள் மகாசபை சார்பில் விவசாயிகள் கண்களில் கருப்பு துணி கட்டி காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். சேலத்துக்கு மேட்டூர் குடிநீர் வந்த பிறகு பனமரத்துப்பட்டி ஏரி குடிநீர் திட்டம் கைவிடப்பட்டதால் இந்த கோரிக்கை எழுந்துள்ளது.