கொண்டலாம்பட்டி: விசைத்தறி தொழிலாளி விபத்தில் பலி

சேலம் கொண்டலாம்பட்டி அருகே உள்ள மேல் அய்யம்பாளையத்தை சேர்ந்தவர் துரைசாமி (வயது 38). விசைத்தறி தொழிலாளியான இவர், நேற்று (டிசம்பர் 26) கருப்பூரில் உள்ள அவருடைய பெரியம்மாவை பார்த்துவிட்டு பின்னர் மோட்டார் சைக்கிளில் வீட்டுக்கு திரும்பி வந்து கொண்டிருந்தார். 

இந்த நிலையில் கொண்டலாம்பட்டியை கடந்து உத்தமசோழபுரம் கரபுரநாதர் கோவில் முன்பாக உள்ள பாலத்தில் வந்து கொண்டிருந்தார். அப்போது பின்னால் வந்த அடையாளம் தெரியாத ஏதோ ஒரு வாகனம் மோட்டார் சைக்கிள் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்று விட்டது. 

இதில் தூக்கி வீசப்பட்டு படுகாயம் அடைந்த அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கே பரிசோதித்த டாக்டர்கள் துரைசாமி வழியிலேயே இறந்து விட்டதாக தெரிவித்தனர். 

இந்த விபத்து குறித்து கொண்டலாம்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர். இதில், துரைசாமி 'ஹெல்மெட்' அணியாமல் மோட்டார் சைக்கிளை ஓட்டி வந்ததால் தலையில் மட்டும் லேசான அடிபட்டு இறந்ததும், 'ஹெல்மெட்' அணிந்திருந்தால் உயிர் தப்பி இருக்கலாம் என போலீசார் தெரிவித்தனர். விபத்தை ஏற்படுத்தி விட்டு நிற்காமல் சென்ற வாகனத்தை போலீசார் தேடி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி