சேலத்தில் மண்பாண்ட தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்

தமிழ்நாடு மண்பாண்ட தொழிலாளர்கள், அமைப்பு சாரா தொழிலாளர்கள் சங்கம் சார்பில் கோட்டை மைதானத்தில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில், அரசு வழங்கும் பொங்கல் தொகுப்புடன் மண்பானை, புதிய மண் அடுப்பு ஆகியவற்றை பயனாளிகளுக்கு வழங்கி மண்பாண்ட தொழிலாளர்களை பாதுகாக்க வேண்டும் என்றும், பருவமழை காலங்களில் மண்பாண்ட தொழிலாளர்களுக்கு ரூ. 5 ஆயிரம் நிவாரணம் வழங்க வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டது. சங்க தலைவர் திருநாவுக்கரசு தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில், பானை, அடுப்புகளை கைகளில் ஏந்தி கோஷங்கள் எழுப்பப்பட்டன.

தொடர்புடைய செய்தி