இதையடுத்து சத்யா தனது தந்தை சண்முகத்தைத் தொடர்பு கொண்டு கணவர் எனது வாயில் கொசு மருந்தை ஊற்றிவிட்டார் என்று கூறி கதறி அழுதுள்ளார். உடனே சண்முகம் மற்றும் உறவினர்கள் விரைந்து வந்து மோகன்ராஜிடம் கேட்டுள்ளனர். அப்போது அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரம் அடைந்த அவர்கள் மோகன்ராஜைத் தாக்கியுள்ளனர். இதில் அவர் காயம் அடைந்தார். இதையடுத்து சத்யா மற்றும் மோகன்ராஜ் ஆகிய 2 பேரும் சேலம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டனர். அங்கு தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.
இந்தச் சம்பவம் குறித்து மோகன்ராஜ் கொண்டலாம்பட்டி போலீசில் புகார் கொடுத்தார். அதன்பேரில் சண்முகம் உள்பட 3 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். அதேபோன்று சத்யா தனது வாயில் கொசு மருந்தை ஊற்றி கணவர் கொலை செய்ய முயற்சி செய்தார் என்று கொடுத்த புகாரின் பேரில் மோகன்ராஜ் மீது வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.