சேலம் மாவட்டம் வீரபாண்டி வட்டாரத்தில் உள்ள ராக்கிப்பட்டி, எட்டிமாணிக்கம்பட்டி, பைரோஜி கிராமங்களில் நிலக்கடலை விதைப்பண்ணைகளை வேளாண் இணை இயக்குனர் ஸ்ரீனிவாசன் ஆய்வு செய்தார். அதிக மகசூல் பெற வேளாண் உயரிய தொழில்நுட்பங்கள் மற்றும் வண்ண நெகிழி காகிதங்கள் மூலம் விலங்குகளின் தொந்தரவை தடுப்பது குறித்து விளக்கினார். இந்த ஆய்வின் போது வேளாண் உதவி இயக்குனர் கார்த்திகாயினி உடனிருந்தார்.