சேலம் கொண்டலாம்பட்டி அருகே நியூகாந்தி நகரைச் சேர்ந்த வெள்ளி பட்டறை தொழிலாளி பாலகிருஷ்ணன், நேற்று மாலை காட்டூர் பிரிவு ரோட்டில் உள்ள டீக்கடைக்கு மொபட்டில் சென்று டீ குடித்துவிட்டு திரும்பியபோது, அவரது மொபட் திருடு போனது. இது குறித்து அவர் கொண்டலாம்பட்டி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.