ஆட்டையாம்பட்டி: ஆட்டோ டிரைவரை கத்தியால் குத்தியவர் கைது

ஆட்டையாம்பட்டி அருகே ஆட்டோ டிரைவர் கோபி (25), கடந்த 9-ந்தேதி தானகுட்டிபாளையம் பகுதியில் ஆட்டோவில் சென்றபோது, இறந்த மூதாட்டியின் இறுதி ஊர்வலத்தில் கலந்து கொண்ட மோகன்ராஜ் மற்றும் சீனிவாசன் ஆகியோர் ஆட்டோ மீது மாலைகளை வீசியுள்ளனர். இதை கோபி தட்டி கேட்டதால் ஏற்பட்ட தகராறில், மோகன்ராஜ் மற்றும் சீனிவாசன் ஆகியோர் கோபியை கத்தியால் குத்தியுள்ளனர். கோபி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். போலீசார் சீனிவாசனை கைது செய்துள்ளனர்.

தொடர்புடைய செய்தி