சேலம் அருகே நிலவாரப்பட்டியில் ஜல்லிக்கட்டு

சேலம் நிலவாரப்பட்டி மாரியம்மன் மற்றும் காளியம்மன் கோயில் திருவிழாவை முன்னிட்டு ஞாயிற்றுக்கிழமை ஜல்லிக்கட்டு விழா நடைபெற்றது. சுற்றுலாத்துறை அமைச்சர் ராஜேந்திரன் கொடி அசைத்து இந்த விழாவை துவக்கி வைத்தார். பல்வேறு ஊர்களில் இருந்து சுமார் 600 காளைகள் ஜல்லிக்கட்டுக்காக கொண்டுவரப்பட்டிருந்தன. இதில் 300 மாடுபிடி வீரர்கள் பங்கேற்று காளைகளை அடக்கினர். காளைகள் முட்டியதில் 20 பேர் லேசான காயமடைந்தனர்.

தொடர்புடைய செய்தி