நுங்கு பறிக்க பனைமரம் ஏறிய விவசாயி தவறி விழுந்து பலி

சேலம் மாவட்டம் ஆட்டையாம்பட்டி அருகே சீரகாபாடி கிராமத்தில் பழனிசாமி (32) என்ற விவசாயி, தனது விவசாய நிலத்தில் உள்ள பனை மரத்தில் நுங்கு வெட்ட ஏறும்போது தவறி கீழே விழுந்து படுகாயமடைந்தார். உறவினர்களால் மீட்கப்பட்டு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர், வரும் வழியிலேயே உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இதுகுறித்து ஆட்டையாம்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து, பழனிசாமியின் உடலை பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி