சேலம் கொண்டலாம்பட்டி அருகே விபத்தில் சிக்கிய முதியவர் மரணம்

சேலம் மாவட்டம் கொண்டலாம்பட்டி அருகே செங்கோடம்பாளையத்தைச் சேர்ந்த தறித்தொழிலாளி செல்வம் (60), கடந்த 19-ஆம் தேதி நண்பருடன் மோட்டார் சைக்கிளில் சென்றபோது, சாலையைக் கடக்க முயன்றவர் மீது மோதி நிலைதடுமாறி கீழே விழுந்து படுகாயமடைந்தார். சேலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவர், நேற்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இது குறித்து கொண்டலாம்பட்டி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி