சேலம்: விநாயகா மிஷன்ஸ் பல்கலைக்கழகத்தில் கலாசார கலைவிழா

சேலம் விநாயகா மிஷன்ஸ் நிகர்நிலை பல்கலைக்கழகத்தில் உறுப்பு கல்லூரிகளுக்கு இடையேயான 3-வது கலாசார கலைவிழா ரிதம்-25 நிகழ்ச்சி சேலத்தில் நடந்தது. 

இதில் சென்னை, சேலம், காரைக்கால் மற்றும் புதுச்சேரி ஆகிய 4 வளாகத்தில் உள்ள 23 அங்கீகாரம் பெற்ற கல்லூரிகளில் இருந்து ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவ- மாணவிகள் பங்கேற்றனர். 23 நேரடி மற்றும் 5 ஆன்லைன் நிகழ்வுகள் நடந்தன. இசை, நடனம், நாடகம், இலக்கியம் உள்பட பல்வேறு கலைநிகழ்ச்சிகளில் மாணவர்கள் திறமைகளை வெளிப்படுத்தினர். கலை போட்டியில் சேலம் சங்கராசாரியார் பல் மருத்துவ கல்லூரி வெற்றிக்கோப்பையை பெற்றது. விநாயகா மிஷன்ஸ் ஓமியோபதி மருத்துவ கல்லூரி 2-வது இடம் பிடித்தது. அவர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது.

தொடர்புடைய செய்தி