சேலம் மாவட்டத்தில் ஏரி மண்ணை விற்பனை செய்யும் பலே கும்பல்.

சேலம் மாவட்டத்தில் விவசாயிகள் வசதிக்காக ஏரியில் வண்டல் மண் எடுத்து பயன்படுத்த அழைப்பு விடப்பட்டிருந்தன. அதன்படி விவசாயிகள் அந்தந்த தாலுகா அலுவலகங்களில் ஆன்லைன் மூலம் பதிவு செய்து அனுமதி பெற்று டிராக்டர் மூலம் ஏரியில் ஒரு அடி ஆழத்திற்கு மட்டும் வண்டல் மண்ணையை எடுத்து விவசாய நிலத்திற்கு பயன்படுத்த அனுமதி வழங்கப்பட்டிருந்தன. ஆனால் மகுடஞ்சாவடி, சின்னப்பம்பட்டி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் அளவுக்கு மீறிய ஆழம், அளவுக்கு மீறிய லோடும் எடுத்து அந்த மண்ணை டாரஸ், டிப்பர் லாரியில் கொண்டு பிளாட் நிலத்திற்கு விவசாயின் போர்வையில் விற்பனை செய்து வருகின்றனர். இதனை எந்த அதிகாரியும் கண்டு கொள்வதில்லை. ஒரு காலகட்டத்தில் தமிழ்நாடு முழுவதும் மணல் மற்றும் மண் எடுத்து செல்ல வேண்டும் என்றால் புதுக்கோட்டை மண் மாப்பியோவிடம் அனுமதி பெற்ற பிறகு மண் எடுத்து செல்ல வேண்டும். மண் மாப்பியோவுக்கு மாமுல் சேரவில்லை என்றால், அந்த வண்டியினை அதிகாரி மூலம் பிடித்து வந்தனர். ஆனால் இப்பொழுது புதுக்கோட்டை மண் மாப்பியோவையே மிஞ்சி மண்ணை திருடி விற்பனை செய்யும் கும்பல் அதிக அளவில் இருந்து வருவதாக பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர். மக்கள் வரிப்பணத்தில் சம்பளம் பெறும் அதிகாரிகள் மக்களுக்காக நேரில் ஆய்வு செய்து மண் கடத்தும் கும்பலை மீது கடுமையாக நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக் கொண்டுள்ளனர்.

தொடர்புடைய செய்தி