சேலத்தில் தமிழக அரசின் சார்பில் பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் கலந்து கொண்டார். இந்த விழாவில், இடங்கணசாலை நகராட்சிக்கு புதிதாக ரூ.2 கோடி மதிப்பில் கட்டி முடிக்கப்பட்ட கூடுதல் அலுவலக கட்டிடத்தையும், காடையாம்பட்டி, ராசிகவுண்டனூரில் ரூ.65 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட கூடுதல் பள்ளி கட்டிடத்தையும் முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் காணொலிக்காட்சி மூலம் திறந்து வைத்தார். இதையொட்டி இடங்கணசாலை நகராட்சி அலுவலகத்தில் நடந்த விழாவில், நகராட்சி தலைவர் கமலக்கண்ணன் குத்து விளக்கேற்றினார். இந்நிகழ்ச்சியில் துணைத்தலைவர் தளபதி, ஆணையாளர் பவித்ரா, மற்றும் நகராட்சி கவுன்சிலர்கள், பணியாளர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.