அதன்பேரில் அன்னதானப்பட்டி போலீஸ் உதவி கமிஷனர் பரவாசுதேவ், இன்ஸ்பெக்டர் பிரபா மற்றும் போலீசார் அடங்கிய தனிப்படையினர் கடந்த 2 நாட்களாக மாநகரில் உள்ள பல்வேறு தொழிற்சாலைகள், ஜவுளி நிறுவனங்கள், ஜவுளி ஏற்றுமதி நிறுவனங்களில் தீவிர விசாரணை நடத்தினர். அப்போது சேலம் சன்னியாசிகுண்டு நீலம்மாள் தோட்டம் பகுதியில் உள்ள ஒரு ஜவுளி நிறுவனத்தில் சோதனை நடத்தினர். அப்போது அங்கு வேலை பார்த்து வந்த 6 பேர் மீது போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டது. அவர்களை ரகசிய இடத்தில் வைத்து போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது அவர்களது ஆவணங்களை போலீசார் சரிபார்த்தனர்.
அந்த ஆவணங்கள் அனைத்தும் போலியானவை என்பது தெரிய வந்தது. தொடர்ந்து அவர்களிடம் விசாரணை நடத்தியதில் அவர்கள் வங்காளதேசம் நாட்டைச் சேர்ந்தவர்கள் என்பது தெரிய வந்தது. அதாவது முகமது சலீம் (வயது 30), செரீப் உசேன் (27), மிர் செரீப் (26), ஆரிபுல் ஹாசன் (22), மாமுன் (25), முகமது இஸ்மாயில் (34) என்பது தெரிய வந்தது. மேலும் அவர்கள் கடந்த ஒரு ஆண்டுக்கு முன்பு போலி ஆவணங்கள் மூலம் இந்தியாவிற்குள் வந்தது தெரிய வந்தது.