சங்ககிரி அருகே விஷம் குடித்து வாலிபர் தற்கொலை

சேலம் மாவட்டம் சங்ககிரி அருகே இருகாலூர் பகுதியை சேர்ந்தவர் மாது. இவருடைய மகன் வெங்கடேசன் (வயது 21). இவர் வைகுந்தம் தனியார் பெட்ரோல் பங்கில் உள்ள வாகன எடைபோடும் மையத்தில் கடந்த 4 ஆண்டுகளாக வேலை செய்து வந்துள்ளார். இந்த நிலையில் வாகன எடைபோடும் மையத்தில் 5 நாட்கள் வசூலான பணத்தை உரிமையாளரிடம் ஒப்படைக்காமல் வெங்கடேசன் செலவு செய்து விட்டதாக கூறப்படுகிறது. எடை போடும் மைய உரிமையாளர் பணத்தை கேட்டபோது செலவு செய்துவிட்டேன், மாதா மாதம் சம்பளத்தில் பிடித்து கொள்ளுமாறு வெங்கடேசன் கூறியுள்ளார். 

அதற்கு உரிமையாளர் சம்மதம் தெரிவித்துள்ளார். இந்த நிலையில் வாகன எடைபோடும் மைய உரிமையாளருக்கு எப்படி பணம் கொடுப்பது என்று தெரியாமல் மன வேதனையுடன் இருந்து வந்த வெங்கடேசன், கடந்த 14-ம் தேதி வாகன எடைபோடும் மையத்தில் விஷம் குடித்து விட்டார். இதில் மயங்கி கிடந்த அவரை அருகில் இருந்தவர்கள் உடனடியாக மீட்டு சேலம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி இறந்தார். இந்த சம்பவம் குறித்து சங்ககிரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

தொடர்புடைய செய்தி