2, 937 பயனாளிகளுக்கு ரூ. 1½ கோடியில் நலத்திட்ட உதவிகள்

முதல்வர் மு. க. ஸ்டாலின், காணொலி காட்சி மூலம் 'உங்களுடன் ஸ்டாலின்' திட்டத்தின் கீழ் 1 லட்சத்து 80 ஆயிரம் புதிய பயனாளிகளுக்கு சமூக பாதுகாப்பு திட்ட பயன்களை நேற்று வழங்கினார். சேலம் மாவட்டம் சங்ககிரியில் நடந்த விழாவில் சுற்றுலாத்துறை அமைச்சர் ராஜேந்திரன் தலைமை தாங்கினார். இந்த விழாவில் 2,937 பயனாளிகளுக்கு ரூ. 1 கோடியே 51 லட்சம் மதிப்பில் நலத்திட்ட உதவிகளும், திருமண நிதியுதவி திட்டத்தின் கீழ் 120 கிராம் தங்கமும் அமைச்சர் ராஜேந்திரனால் வழங்கப்பட்டது.

தொடர்புடைய செய்தி