இதையடுத்து விக்னேஷை பிடிக்க கோர்ட்டு பிடிவாரண்ட் பிறப்பித்தது. இதையடுத்து, காரிப்பட்டி போலீசார், வழக்கு விசாரணைக்கு ஆஜராகாமல் தலைமறைவாக இருந்த விக்னேஷை நேற்று போலீசார் கைது செய்து சேலம் மத்திய சிறையில் அடைத்தனர். இதேபோல், மேட்டுப்பட்டியை சேர்ந்த ரஞ்சித்குமார்(29) என்பவரும் திருட்டு வழக்கு விசாரணைக்கு ஆஜராகாமல் 9 மாதமாக தலைமறைவாக இருந்து வந்துள்ளார்.
இவரை பிடிக்க கோர்ட்டு பிடிவாரண்ட் பிறப்பித்தது. இதையடுத்து காரிப்பட்டி போலீசார் வழக்கு விசாரணைக்கு ஆஜராகாமல் தலைமறைவாக இருந்த ரஞ்சித்குமாரை கைது செய்தனர். பின்னர் அவரை சேலம் மத்திய சிறையில் அடைத்தனர்.