சேலம்: மனைவி இறந்த அதிர்ச்சியில் கணவரும் பலி

சேலம் மாவட்டம் இடங்கணசாலை அருகே, வயது முதிர்வு காரணமாக சிகிச்சை பெற்று வந்த மனைவி பாக்கியம் (70) இறந்த அதிர்ச்சியில் கணவர் பெரியண்ணன் (80) பரிதாபமாக உயிரிழந்தார். நேற்று முன்தினம் மனைவி இறந்த நிலையில், நேற்று காலை அவரது உடல் தகனம் செய்ய ஏற்பாடுகள் நடந்தபோது பெரியண்ணன் மயங்கி விழுந்து இறந்தார். இதை கண்ட உறவினர்கள் கதறி அழுதனர். இதையடுத்து, கணவன் மனைவி இருவரின் உடல்களும் ஒரே நேரத்தில் இடங்கணசாலை சுடுகாட்டில் தகனம் செய்யப்பட்டது.

தொடர்புடைய செய்தி