சங்ககிரி: டிராவல்ஸ் வேனில் ஜனநாயகன் திரைப்படம்.. தவெகவினர் ஆவேசம்

சேலம் மாவட்டம் சங்ககிரி குப்பனூர் அருகே, நின்று கொண்டிருந்த டிராவல்ஸ் வேனில் விஜய் நடித்த ஜனநாயகன் திரைப்படம் ஓடியது. இதைப் பார்த்த தவெக நிர்வாகிகள், படம் ஓடியது குறித்து டிரைவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்து அளிக்கப்பட்ட புகாரின் பேரில், வேன் டிரைவர் சீனிவாசன் மீது சங்ககிரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்தி