சேலம் அரசு மருத்துவமனையில் தேரில் சிக்கிய மாணவர் பலி

திருச்செங்கோட்டில் இன்று (மே 31) காலை 10.30 மணியளவில் அர்த்தநாரீசுவரர் திருக்கோயில் தேர்த்திருவிழாவின்போது, தேரின் சக்கரத்திற்கும் அருகிலிருந்த சுவற்றிற்கும் இடையே எதிர்பாராதவிதமாக சிக்கிக்கொண்ட ஹர்ஷவர்தன் (19) என்ற இளைஞர் பலத்த காயமடைந்தார். மேல் சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதனையடுத்து அமைச்சர்கள் அருண் ராஜ், விஜயதமிழ்ன் பார்த்திபன், லோகேஷ் தமிழ்செல்வன் ஆகியோர் சேலம் அரசு மருத்துவமனைக்கு நேரில் விரைந்தனர்.

தொடர்புடைய செய்தி