சங்ககிரியில் புனித அந்தோணியார் ஆலய தேர்த்திருவிழா

சேலம் மாவட்டம் சங்ககிரியில் பழைய எடப்பாடி ரோடு பகுதியில் உள்ள புனித அந்தோணியார் ஆலய தேர்த்திருவிழா கடந்த 1-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவையொட்டி மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட தேரில் புனித அந்தோணியார் சிலையை ஏற்றினர். தொடர்ந்து தேரோட்டம் நடந்தது. சந்தை பேட்டை, புதிய எடப்பாடி ரோடு, பவானி மெயின்ரோடு வழியாக பழைய எடப்பாடி ரோடு வழியாக மீண்டும் ஆலயத்தை வந்தடைந்தது. இந்த ஊர்வலத்தில் பங்கு தந்தை கிருபாகரன், அருள்பணி லாரன்ஸ், டெல்லீஸ்ரோஸ், ஏசுநாதன் மற்றும் கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டனர்.

தொடர்புடைய செய்தி