சங்ககிரி: மூதாட்டிகளை கொன்ற நபரை சுட்டு பிடித்த போலீசார்

சேலம் மாவட்டம் இளம்பிள்ளை அருகே கல்குவாரியில் பாவாயி, பெரியம்மாள் என்ற கூலித்தொழிலாளிகளின் சடலங்கள் மீட்கப்பட்டன. நகைக்காக அவர்களை கொலை செய்து வீசியதாகக் கூறப்படும் அய்யனாரை சங்ககிரி போலீசார் தீவிரமாக தேடி வந்தனர். இன்று அதிகாலை ஒருக்காமலை பகுதியில் பதுங்கி இருந்த அய்யனாரை பிடிக்கச் சென்றபோது, அவர் எஸ்ஐ கண்ணனை தாக்கி தப்பிக்க முயன்றார். இதனையடுத்து போலீசார் அய்யனாரின் வலது காலில் துப்பாக்கியால் சுட்டுப் பிடித்தனர்.

தொடர்புடைய செய்தி