சங்ககிரி மலை அடிவாரம்: கள்ளத்தனமாக மது விற்பனை செய்தவர் கைது

சங்ககிரி மலை அடிவாரம் ராயலூர் பகுதியில் மது பாட்டில்கள் பதுக்கி விற்பனை செய்யப்படுவதாக வெளியான வீடியோவை அடுத்து, சங்ககிரி போலீசார் அதிரடி சோதனை நடத்தினர். இதில், படைவீடு பகுதியைச் சேர்ந்த செந்தில்குமார் என்பவர் கள்ளத்தனமாக மதுபானம் விற்றுக் கொண்டிருந்தபோது கைது செய்யப்பட்டார். அவரிடமிருந்து முட்புதரில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 30 மது பாட்டில்கள் மற்றும் ரூ. 3,400 ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டது. இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி