சேலம் சர்க்கார் கொல்லப்பட்டி பூமிநாயக்கன்பட்டி சாலை பழுதடைந்துள்ளதால் பொதுமக்கள் பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. கனரக வாகனங்கள் செல்லத்தக்க வகையில் கான்கிரீட் சாலையாக அமைக்கக் கோரி அப்பகுதி மக்கள் மனு அளித்துள்ளனர். மேலும், இரும்பாலை மெயின் ரோட்டிலிருந்து தாசநாயக்கன்பட்டி வழியாக முத்துநாயக்கன்பட்டி இணைப்புச் சாலையை புதிய தார் சாலையாக அமைக்க வேண்டும் என்ற கோரிக்கைகளையும் வலியுறுத்தி, மனு அளித்தும் நடவடிக்கை எடுக்காததால் அருள் எம்எல்ஏ தலைமையில் மக்கள் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அதிகாரிகள் மற்றும் போலீசார் தலையிட்டு உடனடியாக சாலை அமைத்து தர உறுதியளித்ததை அடுத்து போராட்டம் கைவிடப்பட்டது.