தேவூர் அம்மாபாளையம் பகுதியில் இன்று மின்சாரம் நிறுத்தம்

எடப்பாடி கோட்டம் தேவூர் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் இன்று (வியாழக்கிழமை) நடைபெறுகிறது. இதன்காரணமாக காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை அம்மாபாளையம், மயிலம்பட்டி, மாமரத்துகாடு, அரியாங்காடு, குறுக்குபாறையூர், எல்லப்பாளையம், புதுப்பாளையம் ஆகிய பகுதிகளில் மின்சாரம் நிறுத்தப்படுகிறது. இந்த தகவலை மின்வாரிய செயற்பொறியாளர் (பொறுப்பு) ரமேஷ் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்தி