சேலம் மாவட்டம் எடப்பாடி அருகே கோணசமுத்திரம் பகுதியை சேர்ந்த மின்வாரிய ஊழியர் சீரங்கன் (51), தண்ணீர் கேட்பது போல் வீட்டிற்கு வெளியே நின்றுகொண்டிருந்த 16 வயது சிறுமியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாகக் கூறப்படுகிறது. அதிர்ச்சியடைந்த சிறுமி தனது தாயிடம் தெரிவிக்க, அவர் சங்ககிரி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் இன்ஸ்பெக்டர் கார்த்திகேயினி, எஸ்ஐ மல்லிகா ஆகியோர் சீரங்கன் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.