தமிழக வெற்றி கழக தலைவர் விஜய், வரும் டிசம்பர் 4ம் தேதி சேலத்தில் நடைபெறும் கூட்டத்தில் பங்கேற்க உள்ளதாக சேலம் மாவட்ட நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர். இதற்கான அனுமதி கோரி சேலம் மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் மனு அளிக்கப்பட்டுள்ளது. சேலம் கோட்டை மைதானம், போஸ் மைதானம் அல்லது சீலநாயக்கன்பட்டி அருகே உள்ள தனியார் மைதானம் ஆகிய மூன்று இடங்களில் ஒன்றில் அனுமதி கோரப்பட்டுள்ளது. இது குறித்து காவல்துறையினர் ஆய்வு செய்து பின்னர் முடிவெடுப்பதாக தெரிவித்துள்ளனர்.