எடப்பாடி தாலுகா வெள்ளரிவெள்ளி கிராமத்தைச் சேர்ந்த எலக்ட்ரீசியன் திருமூர்த்தி (38), நண்பர் கவியரசுடன் இருசக்கர வாகனத்தில் சென்றபோது, சங்ககிரி அருகே மங்கரங்கம்பாளையம் பேருந்து நிறுத்தம் அருகே முன்னால் சென்ற இருசக்கர வாகனம் மீது மோதி பரிதாபமாக உயிரிழந்தார். தலையில் பலத்த காயமடைந்த திருமூர்த்தி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். படுகாயமடைந்த கவியரசு அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இது குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.