சங்ககிரி டி. பி. ரோடு பகுதியை சேர்ந்த எல்லப்பன் (84) என்பவர், மத்தாளி காலனி பகுதியில் உள்ள ஏ.டி.எம். மையத்தில் பணம் எடுக்க சென்றபோது, அங்கு பணம் வரவில்லை. அருகில் இருந்த ஒருவர், எல்லப்பனின் ஏ.டி.எம். கார்டுக்கு பதில் வேறு கார்டை கொடுத்துவிட்டு, பணம் வரவில்லை என்று கூறியுள்ளார். பின்னர் அந்த நபர், எல்லப்பனின் ஏ.டி.எம். கார்டை பயன்படுத்தி ரூ.40 ஆயிரத்தை திருடிச் சென்றுள்ளார். அதிர்ச்சியடைந்த எல்லப்பன் சங்ககிரி போலீசில் புகார் அளித்துள்ளார். புகாரின் பேரில் போலீசார் மர்ம நபரை தேடி வருகின்றனர்.