அப்போது மகுடஞ்சாவடி பஸ் நிறுத்தம் பகுதியில் சந்தேகப்படும்படி சூட்கேசுடன் நின்று இருந்த நபரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தினர். அவர் முன்னுக்கு பின் முரணாக பதில் கூறினார். இதனால் போலீசார் அவர் வைத்திருந்த சூட்கேசை சோதனை செய்தனர். இதில் கஞ்சா இருப்பது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அந்த நபரிடம் விசாரணை நடத்தினர்.
அவர் கேரள மாநிலம் பாலக்காடு ஆலந்தூர் புதுயாங்கம் பகுதியை சேர்ந்த ரித்தீஷ் (வயது 42) என்பதும், ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் இருந்து கேரளாவுக்கு பஸ்சில் கஞ்சா கடத்த முயன்றதும் தெரியவந்தது. இதையடுத்து அவரை போலீசார் கைது செய்தனர். தொடர்ந்து அவரிடம் இருந்து 30 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.