இளம்பிள்ளை அருகே பெரிய மாரியம்மன் கோயில் கும்பாபிஷேகம்

சேலம் மாவட்டம் இளம்பிள்ளை அருகே தப்பகுட்டை அய்யனூரில் உள்ள பெரிய மாரியம்மன் கோவில் கும்பாபிஷேக விழா நேற்று நடைபெற்றது. கஞ்சமலை சித்தேஸ்வரர் கோவிலில் இருந்து பக்தர்கள் புனித நீர் மற்றும் தீர்த்த குடங்களுடன் ஊர்வலமாக வந்தனர். விநாயகர் வழிபாடு, கோபுர கலசம் வைத்தல், யாக பூஜை ஆகியவற்றைத் தொடர்ந்து, இரண்டாம் கால யாக பூஜை மற்றும் பரிவார தெய்வங்கள், பெரிய மாரியம்மனுக்கு கும்பாபிஷேகம் சிவாச்சாரியார்கள் மூலம் நடத்தப்பட்டது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர். அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.

தொடர்புடைய செய்தி