சேலம் மாவட்டம் சங்ககிரி அருகே வைகுந்தம் மேட்டுக்காடு அருந்ததியர் தெருவை சேர்ந்தவர் கந்தசாமி (வயது 55). அங்குள்ள ஓட்டல் ஒன்றில் தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார். இவர் அடிக்கடி தன்னுடைய மனைவியிடம் தகராறு செய்து வந்தார். சம்பவத்தன்று கந்தசாமி மனைவியிடம் மது குடிக்க பணம் கேட்டுள்ளார். அவர் பணம் இல்லை என்று கூறியதாக தெரிகிறது. அதன்பிறகு ஓட்டலுக்கு சென்ற கந்தசாமி, மாலையில் வீடு திரும்பினார். வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் மனைவியின் சேலையில் தூக்கில் தொங்கினார். இதைக்கண்ட அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் கந்தசாமி பரிதாபமாக இறந்தார். கந்தசாமி தற்கொலை தொடர்பாக சங்ககிரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.