சேலம்: காவிரி ஆற்றில் கிடந்த பிணம் மீட்பு

எடப்பாடி அடுத்த பூலாம்பட்டி பகுதியில் காவிரி ஆற்றின் குறுக்கே கதவணை கட்டப்பட்டு நீர்மின் உற்பத்தி நடைபெற்று வருகிறது. இந்த கதவணையின் நீர்ப்பிடிப்பு பகுதியான பூலாம்பட்டி அருகில் உள்ள பனங்காடு பகுதியில் நேற்று மாலை காவிரி ஆற்றில் பெண் ஒருவரது பிணம் மிதந்தது. இதைக்கண்ட அப்பகுதி பொதுமக்கள், இதுகுறித்து பூலாம்பட்டி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் ஆற்றில் மிதந்த பெண்ணின் உடலை மீட்டனர். சுமார் 55 வயது மதிக்கத்தக்க அந்த பெண் சிவப்பு நிறத்தில் சேலை அணிந்திருந்தார். இறந்த பெண் குறித்து அடையாளம் தெரியாத நிலையில் அவரது உடலை பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்த போலீசார் சம்பந்தப்பட்ட பெண் குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி