சேலம் அருகே மனைவி பிரிந்து சென்ற விரக்தியில் ஊழியர் தற்கொலை

கொங்கணாபுரம் அருகே மடத்தூர் கிராமத்தைச் சேர்ந்த கார்த்திக் (47) என்பவர், குடும்பப் பிரச்சனை காரணமாக மனைவி பிரிந்து சென்றதால் மனமுடைந்து பூச்சிக்கொல்லி மருந்து குடித்து தற்கொலைக்கு முயன்றதாகக் கூறப்படுகிறது. உறவினர்களால் மீட்கப்பட்டு சேலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட அவர், சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்தார். இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி