சேலம் மாவட்டத்தில் வருகிற 11, 12 ம் தேதி ட்ரோன்கள் பறக்க தடை

சேலம் மாவட்ட கலெக்டர் பிருந்தா தேவி வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது: - முதலமைச்சர் ஸ்டாலின் சேலம் மாவட்டத்திற்கு நாளை மறுநாள் 11ஆம் தேதி, வருகை புரிந்து 12ஆம் தேதி காலை காவிரி டெல்டா பாசனத்திற்கு மேட்டூர் அணையை திறந்து வைத்து சேலம் அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவக் கல்லூரி வளாகத்தில் நடைபெறும் அரசு விழாவில் புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டுகிறார். 

மேலும் முடிவுற்ற திட்ட பணிகளை திறந்து வைத்து அரசு நலத்திட்ட உதவிகளை பயனாளிகளுக்கு வழங்க உள்ளார். இதனை ஒட்டி சேலம் மாவட்டத்தில் வருகிற 11-ம் தேதி மற்றும் 12ம் தேதி இரண்டு நாட்களில் ட்ரோன்கள் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்தி