சேலம் மாவட்டம் சங்ககிரி போலீஸ் நிலையத்தில் சேலம் சரக டி. ஐ. ஜி. உமா ஆய்வு செய்தார். அப்போது கொலை, கொள்ளை, கற்பழிப்பு, திருட்டு, வழிப்பறி, பெண்களுக்கு எதிரான குற்றம் உள்ளிட்ட பதிவேடுகளை பார்வையிட்டு ஆய்வு செய்தார். அதன்பிறகு சங்ககிரி பகுதியில் நிலுவையில் உள்ள வழக்குகளை விரைந்து முடிக்கவும், குற்றவாளிகளை கைது செய்யவும் அறிவுறுத்தினார். மேலும், சட்ட ஒழுங்கு பிரச்சினை நடக்காமல் இருக்க ரோந்து பணியை அதிகப்படுத்தி பாதுகாக்க வேண்டும் என்றும், விபத்துக்கள் நடக்கும் இடங்களை நேரில் பார்வையிட்டும் ஆய்வு செய்தார். ஆய்வின் போது சங்ககிரி போலீஸ் துணை சூப்பிரண்டு சிந்து, போலீஸ் இன்ஸ்பெக்டர் ரமேஷ் மற்றும் போலீசார் உடன் இருந்தனர்.