முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் 2 நாட்கள் சேலத்தில் முகாமிட்டதையொட்டி கூடுதல் டி.ஜி.பி. டேவிட்சன் தேவாசீர்வாதம் சேலத்தில் தங்கி பாதுகாப்பு பணிகளை மேற்கொண்டார். இதைத்தொடர்ந்து நேற்று சங்ககிரி போலீஸ் துணை சூப்பிரெண்டு அலுவலகத்தில் கூடுதல் டி.ஜி.பி. டேவிட்சன் தேவாசீர்வாதம் ஆய்வு நடத்தினார். தொடர்ந்து சேலம் மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
இதற்கு கூடுதல் டி.ஜி.பி. டேவிட்சன் தேவாசீர்வாதம் தலைமை தாங்கினார். தொடர்ந்து மாவட்டத்தில் சட்டம், ஒழுங்கு, நிலுவையில் உள்ள வழக்குகள் அதன் மீது எடுத்த நடவடிக்கைகள் குறித்து போலீஸ் கமிஷனர் பிரவீன்குமார் அபிநவுவிடம் கேட்டறிந்தார். பின்னர் பதிவேடுகளை ஆய்வு நடத்தினார்.
பின்னர் பொதுமக்கள் வழங்கும் கோரிக்கை மனுக்கள் மீது விரைவில் நடவடிக்கை எடுக்க வேண்டும். நிலுவையில் உள்ள வழக்குகளை விரைந்து முடிக்க வேண்டும். குறிப்பாக நிலுவையில் உள்ள வழக்குகளுக்கு குற்றப்பத்திரிகை தாக்கல் செய்வதில் தனிக்கவனம் செலுத்த வேண்டும் என போலீஸ் அதிகாரிகளுக்கு அவர் உத்தரவிட்டார்.