சேலம்: அலைடு ஹெல்த் சயின்ஸ் துறை சார்பில் கிறிஸ்துமஸ் விழா

விநாயகா மிஷன் விம்ஸ் மருத்துவமனை வளாகத்தில் உள்ள அலைடு ஹெல்த் சைன்ஸ் நுண்கலை அமைப்பின் சார்பில் கிறிஸ்துமஸ் கொண்டாட்டம் கல்லூரி வளாகத்தில் கொண்டாடப்பட்டது. நிகழ்ச்சிக்கு துறையின் பேராசிரியர் செந்தில் குமார் முன்னிலை வகித்து மாணவர்களிடையே கிறிஸ்துமஸ் சார்ந்த சிறப்புகள் குறித்து எடுத்துரைத்தார். 

தொடர்ந்து துறையைச் சேர்ந்த மாணவர்கள் மற்றும் பேராசிரியர்கள் பைபிள் வாசித்து பிரார்த்தனை செய்தனர். மேலும் ஏசு கிறிஸ்து பிறப்பு குறித்த சிறப்பு நாடகம், கரோல்ஸ் பாடல் நிகழ்ச்சிகள் போன்றவை துறை மாணவர்கள் மூலம் நடத்தப்பட்டது. இந்த கொண்டாட்டத்தில் சிறப்புத் துறை மாணவர்கள் கல்லூரி வளாகத்தில் குடில் அமைத்து கிறிஸ்மஸ் தாத்தா வேடமனிந்து மகிழ்ச்சியினை வெளிப்படுத்திய விதம் மிகவும் சிறப்பாக அமைந்திருந்தது. நிகழ்ச்சியின் முடிவில் கேக் வெட்டப்பட்டு அனைவருக்கும் வழங்கப்பட்டது. இதற்கான அனைத்து ஏற்பாட்டையும் துறையின் நுண்கலை அமைப்பின் ஆலோசகர் உமா மகேஸ்வரி செய்திருந்தார்.

தொடர்புடைய செய்தி