அந்த பணத்தை ஒரு மாதத்தில் திருப்பி தருவதாக கூறினார்கள். ஆனால் 7 மாதம் கழித்து ரூ. 50 ஆயிரத்தை மட்டும் திருப்பி கொடுத்தனர். ஆனால் அந்த பணத்திற்கு உண்டான வட்டி ரூ. 18 ஆயிரத்தை கொடுக்கவில்லை என கூறப்படுகிறது. இந்த நிலையில் வட்டிதர மறுத்து சக்திவேலை கோகுல், ஜீவா, அஜித், கவின், கீர்த்தி ஆகிய 5 பேர் சேர்ந்து சரமாரியாக தாக்கி உள்ளனர்.
அப்போது ஏற்பட்ட தகராறில் சக்திவேல் கழுத்தில் இருந்த 3½ பவுன் தங்க நகையை காணவில்லை என சங்ககிரி போலீஸ் நிலையத்தில் அவர் புகார் கொடுத்தார். அதன்பேரில் கோகுல், ஜீவா, அஜித், கவின், கீர்த்தி ஆகிய 5 பேர் மீது சங்ககிரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.