சேலம் இந்திய மருத்துவ சங்க கட்டிடத்தில் மிட் வெஸ்ட் ஆர்த்தோ சொசைட்டி தலைவர் மோகனசுந்தரம் செய்தியாளர்களை சந்தித்தார். அப்பொழுது ஆண்டுதோறும் ஆகஸ்ட் 4 ஆம் தேதி எலும்பு மூட்டு தினமாக கொண்டாடப்படுகிறது. உலக எலும்பு மூட்டு தினத்தை ஒட்டி அனைத்து தரப்பினரிடையும் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் தொடர் ஓட்டம் மற்றும் தலைக்கவசம் விழிப்புணர்வு பேரணி நடைபெறவுள்ளது.