தாரமங்கலம் அருகே ஆரூர்பட்டி கிராமத்தைச் சேர்ந்த ஆட்டோ டிரைவர் குழந்தை என்கிற ஆனந்தராஜ் (50), டாஸ்மாக் கடை அருகே பெயிண்டர் சுரேஷை (34) வழிமறித்து தாக்கியதில் சுரேஷ் பலத்த காயமடைந்தார். சேலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சுரேஷின் புகாரின் பேரில், தாரமங்கலம் போலீசார் ஆனந்தராஜை கைது செய்தனர்.