தேவூரில் தோட்டக்கலைத்துறை உதவி இயக்குனர் நேரில் ஆய்வு

தேவூர் அருகே கரட்டுப்பாளையம், ஆலத்தூர், ரெட்டிபாளையம், பச்சபாலியூர், குறுக்குபாறையூர் உள்ளிட்ட பகுதிகளில் சின்ன வெங்காயம் அறுவடை நடந்து வருகிறது. விளைச்சல் அதிகரிப்பால் சின்ன வெங்காயம் விலை வீழ்ச்சி அடைந்து கிலோ ரூ. 15 முதல், ரூ. 20 வரை விற்பனை செய்யப்படுகிறது. இந்நிலையில் சங்ககிரி தோட்டக்கலைத்துறை உதவி இயக்குனர் சரஸ்வதி தலைமையில் அலுவலர்கள் திருப்பதி, விஜயவர்மன் ஆகியோர் தேவூர், கரட்டுப்பாளையம் பகுதிகளில் சின்ன வெங்காயம் அறுவடை செய்யப்படும் வயல்களுக்கு சென்று ஆய்வு செய்தனர். மேலும் சின்ன வெங்காயம் சாகுபடி செய்யும் முறை, உழவர் சந்தைகளுக்கு சின்ன வெங்காயத்தை அனுப்ப நடவடிக்கை எடுத்தனர்.

தொடர்புடைய செய்தி